முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

செய்யாறில் இருதய பரிசோதனை முகாம்

செய்யாறில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இருதய நோய் கண்டறியும் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 10:01 am IST

செய்யாறில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இருதய நோய் கண்டறியும் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரத் துறையும், தனியார் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் வி.கோவிந்தன் தலைமை வகித்து தொடக்கிவைத்தார். நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் பழனி, தாய்-சேய் நல மருத்துவ அலுவலர் தமீம்கான், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் ஜவகர்பாபு ஆகியோர் மேற்பார்வையில் முகாம் நடைபெற்றது.
முகாமில், தனியார் மருத்துவமனை இருதய நோய் சிறப்பு மருத்துவர் துர்காதேவி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று, 107 பேருக்கு பரிசோதனை செய்தனர். இதில், 11 பேர் இருதய அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். 45 பேருக்கு மாத்திரை மூலமாக குணப்படுத்தலாம் என ஆலோசனைகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.