100 பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடு கட்ட ஆணை: எம்எல்ஏ வழங்கினார்
பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 100 பயனாளிக்கு அதற்கான பணி ஆணையை செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் புதன்கிழமை வழங்கினார்.


பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 100 பயனாளிக்கு அதற்கான பணி ஆணையை செய்யாறு தொகுதி
எம்எல்ஏ தூசி கே.மோகன் புதன்கிழமை வழங்கினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 1,428 கான்கிரீட் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். வேலூர் குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எம்எல்ஏ தூசி கே.மோகன், பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் குடிசை, ஓட்டு வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டும் விதமாக பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 1,428 வீடுகள் கட்ட ரூ.29.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வீடு கட்டுவதற்காக பயனாளிக்கு ரூ.2.10 லட்சம் 4 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 180 நாள்களில் சுமார் 300 சதுர அடியில் வீடு கட்டி முடிக்க வேண்டும். இது போன்ற அரசுத் திட்டங்களை தகுதியுள்ள பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பொறியாளர் எட்வின் ஆல்ப்ரட், உதவிப் பொறியாளர் கலா, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மகேந்திரன், கிருஷ்ணன், வெங்கிடேசன், ரவி, நகரச் செயலர் ஜனார்த்தன், அதிமுக அரங்கநாதன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...