கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆரணி பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ்: அமைச்சர் வழங்கினார்

ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 1,180 பேருக்கு தீபாவளி போனஸாக ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 602-ஐ இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

Updated On :5 நவம்பர் 2018, 9:27 am IST

ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 1,180 பேருக்கு தீபாவளி போனஸாக ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 602-ஐ இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
 ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், 2015 - 2016ஆம் ஆண்டுக்கான லாபத்தொகையில் தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 1,180 பேருக்கு ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 602 போனûஸ வழங்கி, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:
 ஆரணி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் மூலம் 2015 - 16ஆம் ஆண்டு ரூ.5 லட்சத்து 23 ஆயிரத்து 171 லாபத்தொகையும், 2016 - 17ஆம் ஆண்டு ரூ.6 லட்சத்து 37 ஆயிரத்து 412 லாபத்தொகையும், 2017 - 18ஆம் ஆண்டு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் லாபத்தொகையும் கிடைத்துள்ளன. இந்தச் சங்கத்தில் 12,261 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நடைமுறையில் 6,600 பேர் உள்ளனர்.
 2015 - 16ஆம் ஆண்டில் 1,180 பேர் 22 லட்சத்து 72 ஆயிரத்து 8 லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கியமைக்காக அந்த ஆண்டில் பால் உற்பத்தியில் கிடைத்த லாபத்தொகையில் அவர்களுக்கு போனஸாக ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 606 வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் வழங்கிய பாலில் லிட்டருக்கு 30 பைசா வீதம் போனஸ் வழங்கப்படுகிறது.
 பால் உற்பத்தியாளர்கள் அதிகளவில் பால் உற்பத்தி செய்து கூட்டுறவுச் சங்கத்தை மேலும் லாபத்தில் இயங்க வைக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.
 விழாவில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, திருவண்ணாமலை கூட்டுறவு பால் வளம் துணைப்பதிவாளர் எம்.ராஜா, ஆரணி பால் கூட்டுறவு சங்கத் தலைவர் அ.குமுதவள்ளி, நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, நகரச் செயலர் எ.அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏ ஜெமினி கே.ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், நகர அவைத் தலைவர் ஜோதிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.