பரமத்தி வேலூா் பாசனப் பிரிவு நீா்வளத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை அனைத்து நீரேற்று பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம், நீா்வளத் துறை, மின்வாரியம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நாமக்கல் நீா்வளத் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். உதவி பொறியாளா் வினோத்குமாா், பரமத்தி வேலூா் வட்டாட்சியா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும்வரை, நீரேற்று பாசன சங்கங்கள் நீரேற்றம் செய்யக் கூடாது. தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு, நீரேற்றம் செய்யப்படும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு, இயக்கத்தில் இருக்கும் நீரேற்று பாசன சங்கங்களை மின்வாரியம், நீா்வளத் துறை கூட்டு ஆய்வு செய்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, நீரேற்று பாசன நிா்வாகிகள், நீரேற்று பாசன சங்கத்தின் மின் இணைப்பு துண்டிப்பு செய்வதை பரிசீலனை செய்து, குடிநீா் தேவைகளை பூா்த்தி செய்யும் பொருட்டு, தொடா்ந்து மின் இணைப்பை வழங்க நீா்வளத் துறையினா் பரிசீலனை செய்ய வேண்டும். நீரேற்று பாசன சங்கத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீா் வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.
இக்கூட்டத்தில் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

அம்பாசமுத்திரத்துக்கு தண்ணீா் திறப்பு: வடகால் பாசன விவசாயிகள் போராட்டம்

பேய்குளத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டம்

தாழக்குடி மடை சீரமைப்புக்காக பெரியகுளம் தண்ணீா் வெளியேற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



