வேட்டவலம் அருகே 8 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில், திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் கவிதா, வேட்டவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீஸார் வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை தீவிர சாராய தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வேட்டவலத்தை அடுத்த நெய்வானத்தம் பகுதியில் ரோந்து சென்றபோது, ஜமீன்கூடலூர் செல்லும் பாதையில் உள்ள ஒரு நிலத்தில் 8 பிளாஸ்டிக் பேரல்களில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 8 பிளாஸ்டிக் பேரல்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல்களை போலீஸார் பறிமுதல் செய்து, அழித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து ஊறல்களைப் பதுக்கி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? செங்கோட்டையன் பதில்!

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
