கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி ஆய்வில் 420 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவின்பேரில், மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி அசோக்குமார், மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா, கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் தனிப்படையினர் சனிக்கிழமை கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர மது விலக்கு தணிக்கையில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த காக்காபட்டி கொல்லைமேடு பகுதியில் உள்ள பெரியசாமிக்குச் சொந்தமான நிலத்தின் வழியே சென்றபோது, அந்த நிலத்தில்
5 பிளாஸ்டிக் கேன்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 140 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சேகரை போலீஸார் கைது செய்தனர்.
280 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்:
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராம எல்லையில் உள்ள வீரமணிக்குச் சொந்தமான நிலத்தில் ஆய்வு செய்தபோது, அங்கு முள் புதரில் 8 கேன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 280 லிட்டர் எரிசாராயம், சாராயம் காய்ச்சப் பயன்படும் பேரல் அடுப்பு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இவற்றை மறைத்து வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் 2 நாள்களாக நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 420 லிட்டர் எரிசாராயம்
பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

