திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து அனக்காவூர் பகுதியில் பொதுமக்களுக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அனக்காவூரில் ஆட்டோவில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் உதவி ஆய்வாளர் அலெக்ஸ் பேசியதாவது: கிராம மக்கள் வெளியில் செல்லும்போது, வீட்டைப் பூட்டி சாவியை திருடர்களுக்கு தெரியும் வகையில் வைத்துவிட்டுச் செல்லக்கூடாது.
சந்தேகப்படும்படியான நபர்கள் கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்தால், அவர்களிடம் விசாரிக்க வேண்டும். மேலும், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்துத் தரச் சொல்லக் கூடாது. வங்கியில் பணம் எடுத்தால் விரைவாக வீட்டுக்குச் செல்ல வேண்டும். மோட்டார் சைக்கிளில் டேங்க் கவரில் வைப்பது, பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். இதேபோல, அனக்காவூர் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த செங்காடு, புரிசை, எச்சூர், செய்யாற்றை வென்றான் உள்ளிட்ட பல கிராமங்களில் பொதுமக்களிடையே அனக்காவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அலெக்ஸ் மற்றும் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

உழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

