செய்யாறில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆர்.அன்னம்மாள் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.மகேந்திரமணி முன்னிலை வகித்தார். வட்ட தேர்தல் துணை வட்டாட்சியர் சுகுமாரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியின்போது, செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செய்யாறு வட்டத்தின் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் அனைவருக்கும் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தின விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற சுவரொட்டிகள், சட்டையில் அணியும் வில்லைகள் (பேட்ஜ்கள்), சிறிய விளக்கவுரை புத்தகங்கள் ஆகியவை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இதில், செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
