கேரளத்தில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
4-ஆவது தென்னிந்திய மூவே தாய் சாம்பியனுக்கான குத்துச்சண்டை போட்டி கேரள மாநிலம், கொச்சின் நகரில் 3 நாள்கள் நடைபெற்றது.
இதில், ஜூனியர் பிரிவில் 52 கிலோ எடை பிரிவு போட்டியில் கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர் பி.எஸ்.ஹரிகேசவ், 50 கிலோ எடை பிரிவில் பி.சஞ்சய், 23 கிலோ எடை பிரிவில் 5-ஆம் வகுப்பு மாணவர் இ.யோகேஷ் ஆகிய 3 பேரும் தங்கப் பதக்கத்தையும், 40 கிலோ எடைப் பிரிவில் 8-ஆம் வகுப்பு மாணவர்களான ஏ.திவாகர், வி.ஜெய்ஆகாஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் கூடுதல் தாளாளர் ஆர்.சித்ரா, கல்வியியல் ஆலோசகர் காசிசங்கரேஸ்வரி, பள்ளி முதல்வர் ஜான்மர்லின்இன்பகுமார், பயிற்சியாளர் ஜெ.மதன்தனசேகர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


