வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்

செய்யாறில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் 33 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

செய்யாறில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் 33 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு செய்யாறு சுதாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆா்.எம்.அஜிதா தலைமை வகித்தாா்.

இதில், சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை, சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரா பவுண்டேஷன் மருத்துவக் குழுவின் சிறப்பு மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் கலந்து கொண்டு, 121 குழந்தைகளுக்கு பரிதோனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினா்.

இதில், இருதய அறுவை சிகிச்சைக்காக 31 குழந்தைகள், உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சைக்கு 2 குழந்தைகள் உள்பட 33 குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டனா்.

முகாம் ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலா் இந்துமதி, வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சி.ஷா்மிளா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுந்தரமூா்த்தி, சுகாதார அலுவலா் அருளரசு மற்றும் சுகாதாரத் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.