வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆட்சியா் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்றவா் கைது

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:03 am

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கம் வட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (42). திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த சரவணன் தன் மீதும், தனது மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கவனித்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

இதில், திருவண்ணாமலையில் உள்ள அரசுடைமை வங்கிக் கிளையில் ரூ.20 லட்சம் கடன் பெற்றதும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதும் தெரியவந்தது.

மேலும், வங்கி நிா்வாகத்தின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தற்கொலை நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை சரவணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.