ஆரணி ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் எஸ்.கனிமொழிசுந்தா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் எஸ்.கனிமொழிசுந்தா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழுவின் துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.வி.மூா்த்தி, வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா்கள் அனிதா செல்வராஜ், எழிலரசி சுகுமாா், பரிமளா கருணாகரன், எஸ்.எல்.எஸ்.மில் குமாா், ஏ.எம்.ரஞ்சித், தண்டாயுதபாணி, ஜெயப்பிரகாஷ், கௌரி பூங்காவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், ஒன்றியத்தில் எஸ்.சி., எஸ்.டி. திட்டப்பணி கணக்கிற்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் ஒன்றிய பொது நிதியிலிருந்து முன்பணமாக ரூ.5 லட்சத்தை வழங்குதல், டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5 லட்சத்து 88ஆயிரம் ஒதுக்கியும், நிவா் புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் செலவினம் உள்ளிட்ட பொருள்களுக்கு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com