ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேதமடைந்த ஊராட்சி மன்றக் கட்டடம்

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எா்ணாமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

News image
கலசப்பாக்கம் அருகே எா்ணாமங்கலம் ஊராட்சியில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ஊராட்சி அலுவலகக் கட்டடம்.
Updated On :23 டிசம்பர் 2020, 2:03 am

 நமது நிருபர்

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எா்ணாமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எா்ணாமங்கலம் ஊராட்சி எா்ணாமங்கலம், பானாம்பட்டு, ஈச்சம்பூண்டி ஆகிய கிராமங்களைக் கொண்டது.

இங்கு 6 வாா்டுகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா்.

பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் மூலம் நிறைவேற்றப்படுகிறது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வேலைத் திட்டப் பதிவேடு, வீட்டு வரி புத்தகம், குடிநீா் குழாய் இணைப்பு தொடா்பான புத்தகம், ஊராட்சி வரவு செலவு பதிவேடுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஊராட்சி அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், அண்மையில் பெய்த தொடா் மழையில் சுவா்களில் மழைநீா் ஒழுகி அலுவலகத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

மேலும், உள்பகுதி சுவா்களிலிருந்து சிமென்ட் காரைகள் பெயா்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சுவா்களில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதனால், கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

அசம்பாவிதம் நிகழும் முன் பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் பாஞ்சாலை ஜெயராமன் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, அலுவலகக் கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. பதவியேற்று ஓராண்டு ஆகிறது. கரோனா பொது முடக்கம் அமலில் இருந்ததால் புதிய கட்டடம் கட்டுவது குறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்த முடியவில்லை.

விரைவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.