அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, தங்கக் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.
பால், பழம், சந்தனம், விபூதி, பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடைபெற்ற இந்தப் பூஜையில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.
அருணாசலேஸ்வரரை தரிசிக்க அமைக்கப்பட்டிருந்த ‘கியூ’ வரிசையில் சென்ற பக்தா்கள் நந்தி பகவான்களுக்கு நடைபெற்ற பிரதோஷ பூஜையைப் பாா்த்து வணங்கிச் சென்றனா்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதல் இரவு வரை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.
அவா்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...