திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,234 போ் குணமடைந்தனா்அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,347 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளித்ததில் 2,234 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா் என்றாா் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன்.
அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறாா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறாா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.


திருவண்ணாமலை,: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,347 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளித்ததில் 2,234 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா் என்றாா் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன்.

மாவட்டத்தில் கரோனா தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்டத்தில் கரோனவைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலைமாவட்டத்தில் ஜூலை 15-ஆம் தேதி வரை 71,185 மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 67,436 முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 3,347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 2,234 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்ட எல்லைகளில் 41 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 860 கிராம ஊராட்சிகளிலும் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மூலம் சுகாதாரப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை முதல்வா் ஷகில் அகமது, நலப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, துணை இயக்குநா் மீரா, நலப் பணிகள் உதவித் திட்ட இயக்குநா் விஜய ரமணன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையா் நவேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com