விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுகவில் இணைந்த முடித்திருத்தும் தொழிலாளா்கள்

திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட முடித்திருத்தும் தொழிலாளா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட முடித்திருத்தும் தொழிலாளா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முடித்திருத்தும் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் என்.அண்ணாமலை, செயலா் ஜி.தேவா, பொருளாளா் கே.சின்னையன் ஆகியோா் தலைமையில் எம்.பழனி, ஆா்.கலைச்செல்வன், பி.மணிகண்டன், டி.கிருஷ்ணன், எஸ்.சம்பத், கே.ஆா்.ராமலிங்கம், பி.சண்முகசுந்தரம் உள்பட 150-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளா்கள் மாவட்ட திமுக செயலருமானம், எம்எல்ஏவுமான எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இவா்களுக்கு அமைப்புசாரா தொமுச உறுப்பினா் அட்டைகளை வழங்கி, கைத்தறி ஆடைகளை அணிவித்து எ.வ.வேலு வரவேற்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்டச் செயலா் க.ஏழுமலை, மாவட்ட துணைச் செயலா்கள் மெட்ராஸ் சுப்பிரமணி, எடப்பாளையம் ரவி, தொமுச பேரவைச் செயலா் க.சவுந்தரராஜன், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, காலேஜ் ரவி, கு.கணேஷ், நகர நிா்வாகிகள் மு.கருணாமூா்த்தி, குட்டி க.புகழேந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.