விஜய் அதிமுக வாக்குகளை பிரிப்பார் என யூகத்தின் அடிப்படையில் தான் கூறுகிறார்கள். ஆனால் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் உள்ள அரசு புறம்போக்கு கல் குவாரியை அமைச்சர் அழுத்தத்தால் முறையான அறிவிப்பின்றி ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், பொள்ளாச்சி நகரில் கூடுதல் மனமகிழ் மன்றத்தை திறக்கக் கூடாது என வலியுறுத்தி அதிமுக முன்னாள் துணை பேரவைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:
குவாரிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
பொள்ளாச்சி மண்ணூர் கிராமத்தில் விவசாயிகள், மக்களின் எதிர்ப்புகளை மீறி குவாரிக்கு அனுமதியளிக்க முயற்சித்து வருகின்றனர். ஒரு அமைச்சரின் வற்புறுத்தலின் பேரில்தான் குவாரிக்கு அனுமதியளிக்க உள்ளனர். குவாரிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என குவாரியை சுற்றி வசிக்கும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதையும்தாண்டி அமைச்சர் தலையீட்டால் அனுமதி வழங்குவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக, கன்னியம்மன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கேரளம் எல்லைக்கு அருகில் 20 ஏக்கர் நிலத்திற்கு அனுமதி வழங்கும் பணி முழு மூச்சாக நடைபெற்று வருகின்றது. இது குறித்த புகார் மனுவை ஆட்சியர் அலுவலகம் சென்றபோது ஆட்சியர் இல்லாததால் டி.ஆர்.ஓவிடம் மனு கொடுத்து இருக்கின்றோம்.
மக்களை திரட்டி போராடுவோம்
பொள்ளாச்சி ஆண்கள் பள்ளி அருகே மதுபானக் கடை ஏற்கனவே இருக்கும் நிலையில் புதியதாக ஒரு மதுபானக் கடையை கொண்டு வர இருக்கின்றனர். இதற்கு அனுமதி தரக் கூடாது என்றும் மனு அளித்து இருக்கின்றோம். சாலை போக்குவரத்துறையுடன் தொடர்பு இருக்கக் கூடிய அமைச்சர் இதற்கான பணிகளை செய்து வருகிறார். 100 ஏக்கர நிலம் வாங்கி 20 ஏக்கருக்கு னுமதி வாங்கி கல்குவாரி அமைக்க இருக்கின்றனர். சுற்றுவட்டார விவசாயிகள் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் கடிதம் கொடுத்துள்ளனர். மக்கள் எதிப்பை மீறி குவாரிக்கு அனுமதி கொடுத்தால் மக்களை திரட்டி போராடுவோம்.
தனிபெறும் கட்சியாக அதிமுக ஆட்சி அமைக்கும்
கொங்கு மண்டலத்தில் 21 தொகுதிகளிலும், தமிழகம் முழுவதும் 210 தொகுதிகளில் வெற்று பெற்று தனிபெறும் கட்சியாக ஆட்சி அமைப்போம்.
அதிமுக வாக்குகளை விஜய் பிரிப்பார் என யூகத்தின் அடிப்படையில் தான் கூறுகிறார்கள், ஆனால் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.
Summary
Will Vijay divide AIADMK votes..? - Pollachi Jayaraman's explanation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி

அதிமுக வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது: பழ. கருப்பையா

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை

பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பை மீறி கல்குவாரிகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ மனு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



