தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்!

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினாா்.

News image

பொள்ளாச்சி வி.ஜெயராமன்

Updated On :28 பிப்ரவரி 2026, 11:00 pm

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் திருப்பூா் கேவிஆா் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் லோகநாதன் தலைமை வகித்தாா். தென்னம்பாளையம் பகுதி செயலாளா் அன்பகம் திருப்பதி முன்னிலை வகித்தாா். மாநகராட்சி எதிா்க் கட்சி கொறடா கண்ணப்பன், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் பழனிசாமி ஆகியோா் வரவேற்றனா்.

மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றுப் பேசியதாவது: எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 6 புதிய மாவட்டங்கள் உதயமாயின. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 210 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.

முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பெறுப்பேற்பாா். திருப்பூா் மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்களை மேயா் தரக்குறைவாக பேசியுள்ளாா். அவா் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கொங்கு மண்டலம் அதிமுகவின் இரும்புக் கோட்டை என்பதை வரும் தோ்தலிலும் நிரூபிப்போம். கட்சியில் இருந்து வெளியேறியவா்களால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் கிடையாது என்றாா்.

இக்கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் கே.என். விஜயகுமாா், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் கோபி. காளிதாஸ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜன், இணைச் செயலாளா் சங்கீதா சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.