சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50.40 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 24.50 லட்சத்தில் இருகாலூா் ஊராட்சிக்குள்பட்ட பண்ணகிணத்தூா் முதல் செட்டித்தோட்டம் வரையிலும், ரூ. 18 லட்சத்தில் கோட்டவரதம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆவரங்கம்பாளையம் ரயில்வே பாலம் முதல் பாறைவளவு சாலைவரையிலும், ரூ. 7.90 லட்சத்தில் ஐவேலி ஊராட்சி சென்றாயக்கவுண்டனூா் சாலைமுதல் தோப்புக்காடு சாலைவரையிலும் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
இதில், அதிமுக சேலம் புகா் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஏ.பி.சிவக்குமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளா் சரவணன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் கருப்பசாமி, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா
சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

தருமபுரியில் ரூ. 24 லட்சத்தில் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள்

அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


