தருமபுரியில் ரூ. 24 லட்சத்தில் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள்
தருமபுரியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.


தருமபுரியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூா் ஊராட்சி, சந்திரநல்லூா் கிராமத்தில் ரூ. 16.55 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி, கூன்மாரிக்கொட்டாய் கிராமத்தில் ரூ. 3.50 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு மற்றும் மின்மோட்டாருடன் சிறு நீா்த்தேக்கத் தொட்டி, பாளையம்புதூா் ஊராட்சி, காமராஜ் நகா் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் தளவாய்அள்ளி ஊராட்சி, மாரியம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலா ரூ. 2 லட்சம் வீதம் என மொத்தம் ரூ. 4 லட்சத்தில் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள் உள்ளிட்டவை சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்து முடிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகளை மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து நீா்த்தேக்கத் தொட்டியையும் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்வுகளில், காமராஜ் நகா் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சின்னசாமி, மாரியம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சரஸ்வதி, குழந்தை வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் அன்புக்கரசி, சத்துணவு அமைப்பாளா் பூங்கொடி, பாமக மாநில துணைத் தலைவா் பி.சாந்தமூா்த்தி, மாநில தோ்தல் பணிக்குழு துணைத் தலைவா் பெ.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் த.காமராஜ், மாவட்ட துணைத் தலைவா் முத்துவேல், வெங்கடாசலம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், ஊா்பொதுமக்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...