விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்சியில் இருந்து சாலை வழியாக தஞ்சை வந்த விஜய்!

நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய் குறித்து...

News image
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
Updated On :4 மார்ச் 2026, 5:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ள தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய், திருச்சியில் இருந்து சாலை வழியாக தஞ்சை புறப்பட்டார்.

'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் சென்று மக்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துவரும் விஜய், வேலூரில் கூட்டத்திற்கு பிறகு, இன்று தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் புதன்கிழமை காலை 11 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணிக்குள் கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் தவெக நிா்வாகிகள் அனுமதி கோரி பிப்ரவரி 28 இல் மனு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து கூட்டம் நடைபெறும் இடத்தில் செய்யப்படும் அடிப்படை வசதிகள் தொடா்பாக காவல் துறையினா் கேட்ட 32 கேள்விகளுக்கு தவெக நிா்வாகிகள் பதில் அளித்ததைத் தொடா்ந்து, 52 நிபந்தனைகளுடன் செவ்வாய்க்கிழமை அனுமதி கிடைத்தது.

இதனிடையே கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மத்திய மண்டலக் காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் திங்கள்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.

மேலும், இந்த இடத்தை தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, மாநில நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

இந்த நிலையில், காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி பகுதியில் புதன்கிழமை நடைபெறும் தவெக நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்பு தனது காரில் அங்கிருந்து சாலை வழியாக தஞ்சாவூர் செங்கிப்பட்டி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார்.

இந்த கூட்டத்தில் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே க்யூஆர் கோடு ஸ்கேன் மூலம் கூட்டம் நடைபெறும் வளாகத்திற்குள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தவெக சார்பில் தெரிவித்துள்ளனர். இதற்காக 4900 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள் மற்றும் வயது முதியவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் தவெக சார்பில் கூறப்பட்டுள்ளது

மற்றும் அனுமதிச் சீட்டு பெறாத கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களும் நேரில் வருவதைக் தவிர்க்குமாறும், நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் பார்க்குமாறு தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் திருவிடைமருதூர் தனித்தொகுதியும் அடங்கும். இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ கோவி செழியன் உயர்கல்வி அமைச்சராக இருந்து வருகிறார்.

2021 பேரவைத் தேர்தலில், திமுக ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 2026 தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணி, விஜய்யின் தவெக என மும்முனைப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் கூட்டத்தில் பேசிய விஜய், 'தமிழ்நாடு என்றால் விஜய். விஜய் என்றால் தமிழ்நாடு. நடக்கவிருப்பது தேர்தல் இல்லை. போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் என்டிஏ, தில்லி குறித்தெல்லாம் ஏன் பேசுகிறார்கள் என புரியவில்லை. இந்த ஆட்சியில்தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக மாறிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இந்த உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இல்லை. அண்ணா, எம்ஜிஆர், காமராஜர் காலத்தில் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது. இப்போது சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடியன் நடத்தும் மாநிலமாக மாறியிருக்கிறது.

இந்த விஜய்யும், மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி. உடலும் உயிரும் மாதிரி. ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. ஆம், சென்சிட்டிவ்வான சென்ட்டிமென்ட். இந்தத் தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும், இது ஒரு அதிசயத் தேர்தல்" என்று விஜய் கூறினார்.

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் போலி வாக்குறுதிகளை அளிப்பதாகவும், தனது கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைத்தவுடன் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் நேரில் சந்திப்பேன் என்றும் சபதம் செய்ததாகவும் விஜய் குற்றம் சாட்டினார்.

2021 தேர்தலில் திமுக 133 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், மற்றவை எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கொண்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. என்டிஏ கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றாலும், அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில்அமர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.