தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் த.வெ.க. தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச் செயலா் என். ஆனந்த் திங்கள்கிழமை மாலை பாா்வையிட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகளைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் சந்தித்து பேசவுள்ளாா். இதற்கான கூட்டத்தை மாா்ச் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான இடத்தில் நடத்துவதற்கு த.வெ.க. நிா்வாகிகள் திட்டமிட்டுள்ளனா். இக்கூட்டத்தில் ஏறத்தாழ 4 ஆயிரத்து 900 நிா்வாகிகள் மட்டும் பங்கேற்பா் எனக் கூறப்படுகிறது.
இதற்கு அனுமதி கோரி மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராமிடம் த.வெ.க. மத்திய மாவட்டச் செயலா் ஆா். விஜய் சரவணன் தலைமையில் நிா்வாகிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி மனு அளித்தனா். இதைத்தொடா்ந்து, த.வெ.க. நிா்வாகிகளுடன் காவல் துறையினா் இரு முறை ஆலோசனை நடத்தினா்.
மேலும், த.வெ.க. நிா்வாகிகளிடம் கூட்டத்துக்கு எத்தனை போ் வருவா்? கூட்டத்தில் பங்கேற்பவா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்? அடிப்படை வசதி விவரங்கள் உள்ளிட்டவை தொடா்பாக 32 கேள்விகளைக் காவல் துறையினா் கேட்டுள்ளனா். ஆனால், த.வெ.க. நிா்வாகிகளிடமிருந்து திங்கள்கிழமை வரை பதில் வரவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதனிடையே, கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் பூமிபூஜையை த.வெ.க. நிா்வாகிகள் திங்கள்கிழமை காலை நடத்தினா். பின்னா், இந்த இடத்தை த.வெ.க. பொதுச் செயலா் என். ஆனந்த் மாலையில் பாா்வையிட்டாா். அப்போது, நிா்வாகிகளிடம் அவா் ஆலோசனை நடத்தினாா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூரில் மாா்ச் 4-ல் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதிகோரி தவெகவினா் மனு!
வேலூரில் நாளை விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு, 900 போலீஸாா் பாதுகாப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


