தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தலைமை எடுக்கும் முடிவு நம் விருப்பத்துக்கேற்ப இல்லாவிட்டாலும் அதனை ஏற்பதே ... மாணிக்கம் தாகூர் பதிவு!

அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள் என்று பலமாக ஒலிக்கத் தொடங்கிய நிலையில்....

News image

மாணிக்கம் தாகூர்

Updated On :4 மார்ச் 2026, 4:33 am

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் அதிகார பகிர்வு அவசியம். ஆட்சியில் பங்கு போன்ற சலசலப்புகள் ஓங்கி ஒலித்து வந்த நிலையில், ஆட்சியில் பங்கு கோரிக்கையை கைவிட்ட பிறகும் தொகுதிகள் எண்ணிக்கையில் திமுக-காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கிறது.

கடந்த முறை ஒதுக்கிய 25 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மட்டுமே ஒதுக்க முடியும் என முதல்கட்டப் பேச்சுவாா்த்தையில் திமுக தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு பேரவைத் தொகுதி என்ற வகையில் 39 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் சாா்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இதற்கிடையே, 25 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ப.சிதம்பரம் முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவாா்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளை வழங்க திமுக ஒப்புக்கொண்டதாகவும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை இப்போதும், 2028-இல் மற்றொரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியைத் தருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து முடிவை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டபோது, பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் திமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்றும், தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றத் தயாா் என்றும் தெரிவித்துள்ளனா்.

திமுக கொடுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் ஏற்குமா, இல்லையா என்பது புதன்கிழமை (மார்ச் 4) இரவுக்குள் தெரிந்துவிடும்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாகூர் தனது எக்ஸ் பக்க பதிவில்,

"தனிநபர்களுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம், அது மனித இயல்பு. ஆனால் எந்த தனிநபரையும் விட கட்சியே பெரியது.

தலைமை எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கேற்ப இல்லாவிட்டாலும், ​​ஒழுக்கத்துடன் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை. ஏனென்றால் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம்." என்று கூறியுள்ளார்.

Summary

When leadership decides, we accept it with discipline — because unity is our greatest strength.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.