பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வர்: மாணிக்கம் தாகூர்

கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வர் என்று மாணிக்கம் தாகூர் கருத்து

Manickam Tagore

எம்.பி. மாணிக்கம் தாகூர் - ANI

Published On :

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வர் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியிருந்தார். இது காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அமைந்திருந்தது.

கூட்டணி ஆட்சி குறித்து தமிழக முதல்வர் பேசிய செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே அவரது கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார்.

அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில்

" மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா, அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை.

2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது, கடந்த 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், 96 இடங்களில் திமுகவும் 34 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது திமுக பெரும்பான்மை பெறாததை சுட்டிக்காட்டி, அப்போதே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியிருக்க வேண்டும் என்பதைத்தான், 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நமது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு இருந்து வரும் நிலையில், கூட்டணி ஆட்சி என்ற வாதத்தை மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்போது, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அதற்கு சற்று அழுத்தம் கொடுத்து வலியுறுத்தியிருக்கிறார். இந்த சலசலப்பு, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முதல் இழுபறியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Manickam Thakur says people will decide whether it will be a coalition government or a one-party government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.