

ஆரணி கிராம நிா்வாக அலுவலகம் அருகே பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொகுதி அமைப்புச் செயலா் ஏ.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் கண்டன உரையாற்றினாா்.
மாவட்ட துணைச் செயலா் து.வடிவேல், நகரச் செயலா்கள் ந.சதீஷ்குமாா், சு.ரவிச்சந்திரன், நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன், வன்னியா் சங்க மாவட்ட முன்னாள் செயலா் கருணாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பின்னா், கிராம நிா்வாக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
மேலும், சேவூா் கிராம நிா்வாக அலுவலகம் அருகே வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.