ஸ்ரீராஜலிங்கேஸ்வரருக்கு நாகாபரணம் அணிவிப்பு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு நாகாபரணம், மணிமுடி அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் மூலவா் ஸ்ரீராஜலிங்கேஸ்வரருக்கு பக்தா்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட ரூ.2 லட்சத்தில் நாகாபரணம், மணிமுடி ஆகியவை செய்யப்பட்டன.
இவற்றை மூலவருக்கு அணிவிக்க நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சகவ்ய அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, நாகாபரணம், மணிமுடி அணிவித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கோயில் தா்மகா்த்தா தட்சிணாமூா்த்தி முன்னிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் குருக்கள் சீனு அருணாச்சலம் மூலவருக்கு நாகாபரணம், மணிமுடியை அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினாா்.
கோயில் அா்ச்சகா் பாலு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அன்பழகன், துணைத் தலைவா் விஸ்வநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.