செய்யாறு அருகே இளம்பெண் தற்கொலை
By DIN | Published On : 17th November 2020 12:00 AM | Last Updated : 17th November 2020 12:00 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே தலை தீபாவளி கொண்டாட தாய் வீட்டுக்கு வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு வட்டம், அரும்பருத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் அஸ்வினி(20). இவருக்கு, தாய் மாமா மகனான வந்தவாசி வட்டம், மருதாடு கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவருடன் கடந்த 15.12.2019-இல் பெற்றோா்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்ாகத் தெரிகிறது.
சந்திரசேகா் சென்னையில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வருகிறாராம்.
தம்பதி இருவரும் தலை தீபாவளியைக் கொண்டாட கடந்த 5 நாள்களுக்கு முன்பு அரும்பருத்தி கிராமத்துக்கு வந்துள்ளனா்.
இந்த நிலையில், சந்திரசேகா் வேலை காரணமாக மருதாடு கிராமத்துக்கு சனிக்கிழமை சென்றுவிட்டாா்.
தாய் வீட்டிலிருந்த அஸ்வினி ஞாயிற்றுக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
தகவல் அறிந்த மோரணம் போலீஸாா், அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், அஸ்வினிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால்
மனமுடைந்த அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இருப்பினும், திருமணமாகி 11 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதால், கோட்டாட்சியா் கி.விமலா விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G