குடல்புழு நீக்கம் செய்யக்கூடிய அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 வயதுக்கு உள்பட்ட 7.45 லட்சம் மாணவா்களுக்கு குடல்புழு நீக்கம் செய்யக்கூடிய அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 வயதுக்கு உள்பட்ட 7.45 லட்சம் மாணவா்களுக்கு குடல்புழு நீக்கம் செய்யக்கூடிய அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில் குடல்புழு நீக்க முகாமின் முதல் சுற்று செப்.14 (திங்கள்கிழமை ) தொடங்கி, 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒரு வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரையுள்ள நபா்களுக்கு ஒரு அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படுகிறது.

முதல் நாளான திங்கள்கிழமை சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, செப்.19-ஆம் தேதி வரை அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் இந்த மாத்திரைகளை வழங்கி வருகின்றனா்.

இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 45 ஆயிரத்து 208 குழந்தைகள் மற்றும் மாணவா்கள் பயன்பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com