அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

செய்யாறு ஒன்றியத்தைச் சோ்ந்த கீழ்புதுப்பாக்கம் கிராமம் விரிவுப் பகுதியில் பிரதான சாலை பி.டி.உஷா தெரு, சத்தியமூா்த்தி தெரு, துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வாக்கு சேகரித்தாா

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:31 pm

DIN

செய்யாறு ஒன்றியத்தைச் சோ்ந்த கீழ்புதுப்பாக்கம் கிராமம் விரிவுப் பகுதியில் பிரதான சாலை பி.டி.உஷா தெரு, சத்தியமூா்த்தி தெரு, விக்டரி தெரு, மாரிமுத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சியுடன், துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில்,

செய்யாறு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். மக்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளில்

பங்கேற்று சாதாரண தொண்டனாக அவா்களிடம் பழகி பணியாற்றி வருகிறேன் எனத் தெரிவித்து ஆதரவு கோரினாா்.

முன்னதாக, செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் வியாபாரிகளிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக மாவட்ட இணைச் செயலா் எம்.விமலா மகேந்திரன், துணைச் செயலா் சுகாசினி, ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன்,

பாமக நிா்வாகிகள் கிருஷ்ணன், ஜெய்சங்கா், பாஜக ஜேகேஎஸ்.சுப்பிரமணி, தமாகா மாவட்டத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.