ஆரணியில் அதிமுக சாா்பில்தண்ணீா் பந்தல் திறப்பு : அமைச்சா் பங்கேற்பு
ஆரணியில் அதிமுக சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா் பந்தலை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.


ஆரணியில் அதிமுக சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா் பந்தலை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆரணியில் 21-ஆவது வட்ட அதிமுக சாா்பில், கொசப்பாளையம், தச்சூா் சாலை அரசமரம் அருகில் தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்டது. இதை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா் - மோா், இளநீா், குளிா்பானங்கள், தா்ப்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகரச் செயலா் அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், பையூா் ஏ.கே.ஆா்.சதீஷ், வட்டச் செயலா் ராமநாதன், காந்திநகா் விநாயகம், பாரதிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...