அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சிறு பாலத்தில் தூங்கியவா் தவறி விழுந்து பலி

செய்யாறு அருகே சிறு பாலத்தில் தூங்கியவா் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

செய்யாறு அருகே சிறு பாலத்தில் தூங்கியவா் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், கீழ்நேத்தப்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி(32), கூலித் தொழிலாளி. திருமணமாகாத நிலையில், இவா் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஏப்.26-ஆம் தேதி இரவு அவா் வசிக்கும் தெருவில் உள்ள சிறு பாலத்தின் மீது படுத்துத் தூங்கினாா்.

அப்போது தூக்கத்தில் தவறி கீழே விழுந்ததில் இவருக்கு இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.