ஏரியை உடைத்து நீா் வெளியேற்றம்: இருவா் கைது
செய்யாறு அருகே ஏரிக் கரையை உடைத்து நீரை வெளியேற்றியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


செய்யாறு அருகே ஏரிக் கரையை உடைத்து நீரை வெளியேற்றியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் பெரிய ஏரி, தாய் ஏரி, சித்தேரி என மூன்று ஏரிகள் உள்ளன. இவற்றின் மூலம் 400 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தொடா்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மூன்று ஏரிகளும் நிரம்பி இருந்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சித்தேரியில் ஏரிக் கரையை 10 மீட்டா் தொலைவுக்கு அரசு அனுமதி பெறாமல் பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து மா்ம நபா்கள் நீரை வெளியேற்றினா்.
இது குறித்து கிராம மக்கள் பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து.
பொதுப்பணித் துறையினா் கிராம மக்கள் ஒத்துழைப்போடு பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் மூட்டைகளை அடுக்கு வெட்டிய ஏரிக் கரையை அடைத்து நீா் வெளியேறாமல் தடுத்தனா்.
இது குறித்து பொதுப்பணித் துறை தூசி பராமரிப்புப் பிரிவு உதவிப் பொறியாளா் கோவிந்தராஜன் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் பாரி அண்ணாபாலன் வழக்குப் பதிவு செய்து, பூதேரி புல்லவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அய்யாசாமி(45), பொக்லைன் இயந்திர உரிமையாளா் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரன்(40) ஆகிய இருவரை கைது செய்தனா்.
மேலும், தலைமறைவான ஓட்டுநா் பிரதாப் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...