கொச்சியில் வீட்டில் இருந்து மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொச்சியின் வடுதலாவில் உள்ள வாடகை வீட்டில் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் சனிக்கிழமை சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். பலியானவர்கள் ஸ்ரீகுமாரி (58), அவரது மகள் அஸ்வதி நாயர் (36), 14 மற்றும் 4 வயதுடைய இரண்டு பேரன்கள் மற்றும் இரண்டு வயது பேத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் திருவனந்தபுரம் மாவட்டம் விலாப்பில்சலாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடுதலாவில் உள்ள கர்சகா சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஸ்ரீகுமாரியும் அஸ்வதியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறது.
வேலை விஷயமாக வந்திருந்த கேபிள் டிவி ஆபரேட்டர், அறைக்குள் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாக கண்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டின் உரிமையாளரும் போலீஸாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்ததாகவும், அவர்கள் மாதம் ரூ.35,000 வாடகை செலுத்தி வந்ததாகவும், திருவனந்தபுரத்தில் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு சொத்தும் வீடும் இருந்ததாகவும் போலீஸ் அதிகாரி கூறினார். இதனிடையே வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் மீட்கப்பட்டு களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டன. அங்கு ஞாயிற்றுக்கிழமை உடற்கூராய்வு நடத்தப்பட உள்ளன. எர்ணாகுளம் வடக்கு காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் கொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Five persons, including three children, were found dead at a rented house at Vaduthala here on Saturday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை

அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுப்பு

எதிரே வந்த மினி வேன், பைக் மீது மோதிய அரசுப் பேருந்து! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!
தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



