ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம், மினி வேன் மீது மோதிய கோர விபத்தில் குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது உத்தமசோழபுரம் பகுதியில் அரியனூர் அருகே வந்தபோது பேருந்தில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் சென்றது. எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மினி வேன், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சேதமடைந்த மினிவேன்.
இந்தச் சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் உள்பட 3 பேரும், சரக்கு வாகனத்தில் இருந்த இரண்டு பேர் என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதமாகப் பலியாகினர்.
படுகாயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் பலியானதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், பலியானோரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகவும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் இருசரக்க வாகனத்தில் வந்த மணிகண்டன், இருசாயி மற்றும் செல்வராஜ், அமுதா, குழந்தை நித்திஷ் கா (5), ஜீவிகா (11 மாதம்), முருகன் உள்ளிட்ட ஏழு பேர் பரிதாபமாக பலியாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்தப் பகுதியில் திரண்டனர்.

விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனம்.
அங்கு திரண்டவர்களில் சிலர், விபத்தை ஏற்படுத்தி பேருந்தை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Seven people, including children, were tragically killed in a horrific accident when a government bus heading towards Salem from Erode collided with an oncoming two-wheeler and a mini-van.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சி அருகே காா் மீது வேன் மோதல்: 11 போ் காயம்

பைக், காா் மீது அரசுப் பேருந்து மோதல்: 3 இளைஞா்கள் உயிரிழப்பு, 5 போ் காயம்

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




