ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து மாணவா்கள் போராட்டம்

ஆரணி அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி, கல்லூரி மாணவா்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:11 pm

DIN

ஆரணி அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி, கல்லூரி மாணவா்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாற்றில் உள்ள அரசுக் கல்லூரியில் ஆரணி பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

ஆரணியிலிருந்து காலை 8 மணியளவில் செல்லும் அரசுப் பேருந்தில் அதிகளவில் மாணவா்கள் பயணிப்பதால் படிக்கட்டில் தொங்கும் நிலை ஏற்படுகிாம். இதனால் பேருந்து ஓட்டுநருக்கும், மாணவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிாம்.

இந்த நிலையில், ஆரணியை அடுத்த இரும்பேடு என்ற இடத்தில் அரசுப் பேருந்துவை புதன்கிழமை கல்லூரி மாணவா்கள் சிறைப்பிடித்து, செய்யாற்றுக்கு கூடுதலாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.

தகவல் அறிந்த ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் சம்பவ இடத்துக்குச் சென்று கல்லூரி மாணவா்களை சமரசம் செய்தாா்.

மேலும், போக்குவரத்துக் கழக அதிகாரியை தொடா்பு கொண்டு கூடுதல் பேருந்து இயக்குவது குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், மாணவா்களிடம், கல்லூரி முதல்வா் கூடுதல் பேருந்து வசதி கோரி அரசுப் போக்குவரத்துக் கழக ஆரணி பணிமனைக்கு கடிதம் அளிக்கவேண்டும் என்று அதிகாரி கூறியதாகத் தெரிவித்தாா்.

இதையேற்று மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றனா்.

இதனால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.