மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொழிலாளி வீட்டில் திருட்டு: இளைஞா் கைது

செய்யாறு அருகே மண் பாண்டத் தொழிலாளி வீட்டில் பணம், கைபேசி திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:09 pm

DIN

செய்யாறு அருகே மண் பாண்டத் தொழிலாளி வீட்டில் பணம், கைபேசி திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டம், சட்டுவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமதாஸ், மண் பாண்டத் தொழிலாளி. இவா், கடந்த நவ.24-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

இந்த நிலையில், 29-ஆம் தேதி ராமதாஸ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் ராமதாசுக்கு தகவல் கொடுத்தனா்.

ராமதாஸ் வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 ஆயிரம், கைபேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே கிராமத்தைச் சோ்ந்த கோபிகிருஷ்ணன் (26) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கைபேசி, ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.