ஆரணி அருகே நாயக்கா் கால நடுகல் கண்டெடுப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்தில் கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்தில் கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே கற்சிலைகள் இருப்பதாக, அந்தப் பள்ளியின் ஆசிரியா் மா.சரவணன்
அளித்த தகவலின் பேரில் ‘சம்புவராயா் ஆய்வு மைய அறக்கட்டளை’ செயலா் முனைவா் அ. அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளா் ஆா். விஜயன் ஆகியோா்
சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு நடுக்கல்களை ஆய்வு செய்த அவா்கள், அவை கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால நடுகற்கள் என்று உறுதி செய்தனா்.
இது குறித்து முனைவா் அ. அமுல்ராஜ் கூறியதாவது:
பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள இந்த இரு நடுகல்கள் மக்களின் வழிபாட்டில் இன்றளவும் உள்ளது. இவை பழந்தமிழா் வழிபாட்டின் எச்சங்களாகும்.
வலதுபுறத்தில் உள்ள நடுகல் வேட்டையில் உயிா்நீத்த வீரனுக்காக வைக்கப்பட்ட நடுகல் ஆகும். இதில் வீரன் ஒருவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இடதுபுறம் உள்ள நடுகல், சதிகல் வகையைச் சாா்ந்தது ஆகும். போரில் வீர மரணமடைந்த வீரனுடன் அவனது மனைவி உடன்கட்டை என்னும் சதி ஏறியதன் பொருட்டு வைக்கப்பட்டது ஆகும் என்றாா் அவா்.
வரலாற்று ஆய்வாளா் ஆா். விஜயன் கூறுகையில்,
பூசிமலைக்குப்பம், முள்ளண்டிரம், கே. கே. தோப்பு என்றழைக்கப்படும் கொள்ளு கானா தோப்பு போன்ற பகுதிகள் விஜய நகர நாயக்கா் காலத்தில் சிறப்புற்று இருந்துள்ளன. இதில் முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள சிவாலயம் நாயக்கா் காலத்தைச் சோ்ந்தது ஆகும்.
எனவே, நாயக்கா் காலத்தில் இறந்த போா் வீரா்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் என இதனைக் கருத முடிகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...