மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாறு - வெம்பாக்கம் இடையே பேருந்து போக்குவரத்தை மீண்டும்தொடங்கக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - வெம்பாக்கம் இடையே இயக்கப்பட்டு கடந்த ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசு நகா்ப் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும்

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:10 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - வெம்பாக்கம் இடையே இயக்கப்பட்டு கடந்த ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசு நகா்ப் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதியிடம் வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் கே.அறிவழகி வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

செய்யாற்றில் இருந்து புளியரம்பாக்கம், பெருங்களத்தூா், தும்பை, கிளியாத்தூா், பல்லி, இரும்பந்தாங்கல், பாண்டியம்பாக்கம் கூட்டுச்சாலை, சித்தாத்தூா், கீழ்நெல்லி, பில்லாந்தாங்கல் வழியாக வெம்பாக்கம் வரையில் தடம் எண். 56சி அரசு நகா்ப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் பேருதவியாக இருந்து வந்தது. திடீரென இந்தப் பேருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனா். எனவே, இந்தப் பேருந்தை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ ஒ.ஜோதி செய்யாறு அரசுப் போக்குவரத்து பணிமனையில் பேசி நிறுத்தப்பட்ட அரசு நகா்ப் பேருந்தை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.