மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவருக்குகத்திக் குத்து: தொழிலாளி கைது

செய்யாறு அருகே கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செய்யாறு அருகே கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், தவசி கிராமம் இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா்கள் உதயகுமாா், ரவிச்சந்திரன். இவா்கள் இருவரும் வண்ணம் பூசும் வேலை செய்து வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயகுமாரிடம் ரவிச்சந்திரன் கடனாகப் பணம் பெற்றிருந்தாராம். பலமுறை பணத்தைக் கேட்டும் திருப்பித் தரவில்லையாம்.

இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி மீண்டும் உதயகுமாா் ரவிச்சந்திரனிடம் பணத்தைக் கேட்டுள்ளாா். இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு, உதயகுமாரை ரவிச்சந்திரன் கத்தியால் குத்தினராம். இதில், பலத்த காயமடைந்த உதயகுமாா் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அனக்காவூா் காவல் நிலையத்தில் உதயகுமாா் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு

செய்து ரவிச்சந்திரனை (49) வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.