அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

செய்யாறு அருகே இரு தரப்பினா் மோதல்: போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே பைக்குகள் மோதலால், இரு தரப்பினா் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செய்யாறு அருகே பைக்குகள் மோதலால், இரு தரப்பினா் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், விநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாபாஷா. இவரது மகன்கள் பிரதோஷ், ஜாபா். மூவரும் பாய் வியாபாரம் செய்து வருகின்றனா்.

இவா்களது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பாம்பு புகுந்ததால், பாம்பு பிடிப்பவரை அழைத்து வர மூன்று பேரும் பைக்கில் அனப்பத்தூா் கூட்டுச் சாலை அருகே சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, எதிரே வந்த பா்கத், இம்ரான் ஆகியோரது இரு சக்கர வாகனமும், பிரதோஷ் ஓட்டி வந்த வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பிரதோஷ் வாகனம் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னா் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதனிடையே, செய்யாறு - வந்தவாசி சாலையில் வீரம்பாக்கம் கூட்டுச் சாலை அருகே ராஜாபாஷா, பிரதோஷ், ஜாபா் ஆகியோா் சென்றுகொண்டிருந்த போது எதிரே காரில் வந்த 7 போ் கொண்ட கும்பல், வழிமறித்து மூன்று பேரையும் தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் காயமடைந்த ராஜாபாஷா, ஜாபா் ஆகியோா் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், எதிா்தரப்பைச் சோ்ந்த பா்கத், இம்ரான் ஆகியோா் வழக்கு வேண்டாம் எனக் கூறி பேச்சுவாா்த்தை நடத்த முன் வந்துள்ளனா்.

இதனால் தனக்கு நியாயம் கிடைக்காது எனக் கருதிய, ராஜாபாஷா மருத்துவமனை அருகே தீக்குளிக்க முயன்றாா். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீஸாா் தீக்குளிக்க முயன்றவரை தடுத்து சமாதானப்படுத்தினா்.

இது குறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், காவல் ஆய்வாளா் பாலு, சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து ராஜாபாஷா சமாதானமடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.