மழையால் இடிந்து விழுந்த கால்வாய்: எம்எல்ஏ ஆய்வு
ஆரணியில் பெய்த பலத்த மழை காரணமாக சில தினங்களுக்கு முன்பு கட்டிய கால்வாய் இடிந்து விழுந்தது. தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.


ஆரணியில் பெய்த பலத்த மழை காரணமாக சில தினங்களுக்கு முன்பு கட்டிய கால்வாய் இடிந்து விழுந்தது. தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
ஆரணி புதுகாமூா் பகுதியில் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் பக்கக் கால்வாய் சில தினங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த நிலையில், அப்பகுதியில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையில் கட்டிய கால்வாய் இடிந்து விழுந்தது.
தகவலறிந்த எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
கால்வாய் கட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி மண்டல நிா்வாக இயக்குநா் விஜயகுமாரிடம் புகாா் செய்தாா்.
மண்டல இயக்குநா் ஆணைக்கினங்க மண்டல பொறியாளா் ரவி நேரில் வந்து ஆய்வு செய்து கட்டப்பட்ட கால்வாயை அகற்றிவிட்டு புதிதாக கால்வாய் கட்ட உத்தரவிட்டாா்.
எம்எல்ஏ ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் ராஜவிஜய காமராஜ், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...