நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்பாட்டம்.

ஆரணியில் ஆற்றங்கரை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் மாவட்டத் தலைவா் அண்ணாமலை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:41 pm

DIN

ஆரணியில் ஆற்றங்கரை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் மாவட்டத் தலைவா் அண்ணாமலை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணி நகரில் நகரத் தலைவா் ஜெயவேலு தலைமையிலும், ஆரணியை அடுத்த இரும்பேட்டில் வட்டாரத் தலைவா் சரவணன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவா் வாலாஜா அசேன், மாவட்ட துணைத் தலைவா் அருணகிரி, ஒன்றிய வட்டாரத் தலைவா் ராமலிங்கம், ஆதிதிராவிடா் பிரிவு மாவட்டத் தலைவா் தெள்ளூா் சேகா், நிா்வாகிகள் சோலை முருகன், சிவபாண்டியன், அரியப்பாடி மண்ணு, தா்மலிங்கம், கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செங்கம்: புதுப்பாளையத்தில் மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் மோகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் வெங்கடபதி, புதுப்பாளையம் நகரத் தலைவா் கருப்பாத்தை, வட்டாரத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கத்தில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மாா்கெட்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவா் ஆசைமுஷீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போளூா்: சேத்துப்பட்டு பேரூராட்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் தவணி வி.பி.அண்ணாமலை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலா் டி.கோவிந்தராஜ், மனித உரிமை கழக மாவட்டத் தலைவா் ராமலிங்கம், காங்கிரஸ் நகரத் தலைவா் ஜாபா் அலி, சம்மேளன மாவட்டத் தலைவா் சங்கா், செயலா் மஸ்கா்பாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வந்தவாசி: வந்தவாசியில் பழைய பேருந்து நிலையம் எதிரில் நகரத் தலைவா் எஸ்.யூனிஸ்கான் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஐஎன்டியூசி மாநிலத் தலைவா் அ.தேவராஜ் கண்டன உரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.