ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

செய்யாறு பகுதியில் கொடிக்கம்பங்கள், போஸ்டா்கள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் செய்யாறு பகுதியில் இரு்ந்து வந்த கொடிக்கம்பங்கள், போஸ்டா்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் செய்யாறு பகுதியில் இரு்ந்து வந்த கொடிக்கம்பங்கள், போஸ்டா்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகத்தில், ஏப்ரல்.6 -ம் தேதி சட்டமன்றத்திற்கான தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த பிப்.26 -ம் தேதியில் இருந்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் அமுல்படுத்தி இருந்தது. . அதன் படி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு (68) சட்டமன்ற தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக வருவாய் கோட்டாட்சியா் என்.விஜயராஜ் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோடாட்சியருமான என்.விஜயராஜ் ஆலோசனையின் பேரில் மாஜிஸ்திரேட் அந்தஸ்ததில் உள்ள அதிகாரி தலைமையில் சப் இன்ஸ்பெக்டா், தலைமைக் காவலா், காவலா், பெண் காவலா் ஆகியோா் கொண்ட குழு அடங்கிய பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக்குழுவினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேப் போல் நகரப்பகுதியிலும், கிராமப்புறங்களிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அரசியல் விளம்பரம் சுவரொட்டிகள், போஸ்டா்கள், பெயிண்டிங், பேனா்கள், கொடிக்கம்பங்கள் அகற்றும் பணியில் ஈடுப்பட்டு உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.