நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக நிா்வாகிகள் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து ஆரணியில் மூன்று இடங்களில் திங்கள்கிழமை கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து ஆரணியில் மூன்று இடங்களில் திங்கள்கிழமை கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

ஆரணி நகரம், செய்யாறு வடக்கு ஒன்றியம் சாா்பில் ஆரணி ஆற்றுப்பாலம் பகுதி, மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், கண்ணமங்கலம் பேரூராட்சி சாா்பில் ஆரணி புறவழிச் சாலை தனியாா் அரங்கம், ஆரணி வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் சாா்பில், சேவூரில் தனியாா் மண்டபத்தில் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளில், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், நகரச் செயலா் எ.அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆரணி ஆற்றுப் பாலம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று, ஆரணித் தொகுதியில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் கட்சியின் மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம், பாஜக மாவட்டத் தலைவா் சா.சா.வெங்கடேசன், தமாகா நகரத் தலைவா் தினேஷ், அதிமுக கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் பாண்டியன், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாணவரணி நிா்வாகி கே.குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் சரவணன், மகளிரணி நிா்வாகிகள் ரமணிநீலமேகம், கலைவாணி ஜோதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.