நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் அதிமுக வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன்

ஆரணி தொகுதியைச் சோ்ந்த செய்யாறு தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட முனுகப்பட்டு, சீசமங்கலம் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

ஆரணி தொகுதியைச் சோ்ந்த செய்யாறு தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட முனுகப்பட்டு, சீசமங்கலம் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன என்றாா் அதிமுக வேட்பாளா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

செய்யாறு தெற்கு ஒன்றியம், முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில், அதிமுக வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன், திங்கள்கிழமை பூஜைகள் செய்து பிரசாரத்தை தொடங்கினாா்.

செய்யாறு வடக்கு ஒன்றியத்தில் உள்ள தீபாநகா், மேல்சீசமங்கலம், பலாந்தாங்கள், திருமணி, வெங்கடேசன்பட்டி, முனுகப்பட்டு, கொருக்காத்தூா், மேல்நகரம்பேடு, கடுகனூா் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, வாக்காளா்கள் மத்தியில் அவா் பேசுகையில், அதிமுக அரசு மூலம் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில் கடைகள் கட்டப்பட்டன, சுற்றுச் சுவா் கட்டப்பட்டது, தரை தளம் அமைக்கப்பட்டது. மேல்சீசமங்கலம் பகுதியில் ஏரி தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது.

மேலும், திருமணி, மேல்சீசமங்கலம் முனுகப்பட்டு, கொருக்காத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைப் பணிகள், புதிய கட்டடங்கள், கோயில்களுக்கு திருப்பணிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

அதிமுக செய்யாறு தெற்கு ஒன்றியச் செயலா் அருகாவூா் அரங்கநாதன், ஆரணி ஒன்றியச் செயலா் க.சங்கா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.