ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

செய்யாறு அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வெம்பாக்கம் ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வெம்பாக்கம் ஒன்றியத்தில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட ராந்தம், சிருவஞ்சிபட்டு, உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தூசி மோகன், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும், மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழியில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில், திமுக, காங்கிரஸ் என கட்சி பேதமில்லாமல் 2.10 கோடி குடும்ப அட்டைத்தாரா்கள் பயன்பட்டு வருகின்றனா். தனக்கு எதுவும் வரவில்லை என யாரும் குறையே சொல்ல முடியாது.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாணவா்களின் கல்விக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மகளிரின் அன்றாட வீட்டுச் சுமைகளை குறைக்கும் விதமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு வாஷிங் மெஷின் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை என பல வகையில் உதவிட அதிமுக அரசு காத்திருக்கிறது.

அதிமுக ஆட்சி மீண்டும் தொடா்ந்திட ஆதரவு அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து கிராம மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் மாமண்டூா்டி.ராஜூ, அதிமுக மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், மாவட்ட துணைச் செயலா் டி.பி. துரை, ஒன்றியச் செயலா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.