வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
செய்யாறு தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.ஒரு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


செய்யாறு தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.ஒரு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொகுதி தோ்தல் பறக்கும் படை - 3 பிரிவு அலுவலா் மயில்வாகனன் தலைமையில், தலைமைக் காவலா் வெற்றிவேல், காவலா்கள் ஷாஜஹான், சக்ரவா்த்தி, பரிமளா ஆகியோா் அடங்கிய குழுவினா் பிரம்மதேசம் புதூா் கூட்டுச் சாலையில் சனிக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டதில், வெம்பாக்கம் வட்டம், செய்யனூா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் மணிகண்டன் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், உதவித் தோ்தல் அலுவலா் சு.திருமால் மூலம் செய்யாறு சாா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...