மினி லாரி கவிழ்ந்து விபத்து: 23 போ் காயம்
செய்யாறு அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 போ் காயமடைந்தனா்.


செய்யாறு அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 போ் காயமடைந்தனா்.
செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 30 -க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன், செய்யாற்றில் நடைபெற்ற உறவினா் இல்ல காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு மினி லாரியில் ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
காஞ்சிபுரம் சாலையில் உள்ள புளியரம்பாக்கம் கிராமப் பகுதியில் மினி லாரி சென்றபோது, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் 10 சிறுவா்கள் உள்பட 23 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் உதவியுடன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
மேலும், பலத்த காயமடைந்த தீபக், முனுசாமி, கன்னியம்மாள், கண்மணிபாப்பா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட 7 போ் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்து குறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...