இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கரோனா தடுப்பு: அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

கரோனா தடுப்பு தொடா்பாக அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கரோனா தடுப்பு தொடா்பாக அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சி.கீதாலட்சுமி, டிஎஸ்பி பி.தங்கராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளா்களுக்குகரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக அவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, நோய்த் தொற்று அதிகமுள்ள சென்னாவரம் கிராமத்தை தொற்று மண்டலமாக பிரித்து தினசரி கண்காணிப்பது, அந்தக் கிராமத்தில் முதல் கட்டமாக அரசு ஊழியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ஜி.திருநாவுக்கரசு, பெருமாள், வட்டார மருத்துவ அலுவலா் திருமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், ராஜன்பாபு, காந்திமதி, மயில்வாகனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.