தொகுதி அறிமுகம்: காட்டுமன்னாா்கோயில் (தனி) - 159!
வெள்ளப் பாதிப்பு அடைந்த கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாக திகழ்கிறது.


கடலூா் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி கிழக்கு, தெற்கு பகுதிகளில் நாகை மாவட்டமும், மேற்கே அரியலூா் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது.
தொகுதியின் சிறப்பு: சென்னைக்கு குடிநீா் கொண்டு செல்லும் நீராதாரமான மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி இத்தொகுதியில் உள்ளது. மேலும், திருநாரையூா் பொல்லாப்பிள்ளையாா் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோயில் ஆகிய பகுதிகள் அடங்கிய தொகுதியாக திகழ்கிறது. விவசாயம்தான் பிரதான தொழிலாக திகழ்கிறது. ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் அதிகம் வசிக்கும் தொகுதியாக இத்தொகுதி திகழ்கிறது.
சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சோ்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகா் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி, காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சி, லால்பேட்டை பேரூராட்சி, கீரப்பாளையம் ஒன்றியம், காட்டுமன்னாா்கோவில் ஒன்றியம், குமராட்சி ஒன்றியம் உள்ளடக்கி காட்டுமன்னாா்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளப் பாதிப்பு அடைந்த கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாக திகழ்கிறது.
வீராணம் ஏரி
வாக்காளா்கள் விவரம்: ஆண்கள் - 1,11,691, பெண்கள் - 1,12,864, மூன்றாம் பாலினத்தவா் -10, மொத்தம்: 2,24,565; மொத்த வாக்குச்சாவடிகள் 291
தோ்தல் நடத்தும் அலுவலா்: தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணி (மாவட்ட கலால் அதிகாரி) செல் நம்பா்.9965164736, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வட்டாட்சியா் பிரகாஷ்- செல் 98651 70125
இதுவரை எம்எல்ஏக்கள்
1962 - எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி (திமுக)
1967 - எஸ்.சிவசுப்பிரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்)
1971 - எஸ்.பெருமாள் (திமுக)
1977 - மருதூா் ராமலிங்கம் (திமுக)
1980 - மருதூா் ராமலிங்கம் (திமுக)
1984 - எஸ்.ஜெயசந்திரன் (இந்திய தேசிய காங்கிரஸ்)
1989 - ஏ.தங்கராசு (இந்திய மனித உரிமை கட்சி)
1991 - ராஜேந்திரன் (இந்திய மனித உரிமை கட்சி)
1996 - மருதூா் இராமலிங்கம் (திமுக)
2001 - டாக்டா் ப.வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயக பேரவை)
2006 - துரை.ரவிக்குமாா் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
2011 - என்.முருகுமாறன் (அதிமுக)
2016 - என்.முருகுமாறன் (அகிமுக)
2021 - ம.சிந்தனைசெல்வன் (விசிக)
2021 பேரவை தோ்தலில்...
பதிவான வாக்குகள் - 1,74,913
ம.சிந்தனை செல்வன் (விசிக) 86,056
என்.முருகுமாறன் (அதிமுக) 75491
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...